மண்டூர் ஆத்ம ஞானபீடத்தில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் 11ஆவது ஆண்டு சமாதிதின வழிபாடுகளும்,உலக சேமத்துக்கான மகாயாகமும் இடம்பெறவுள்ளது.

உலகம் இயங்குவதற்கும்,இவ்வுலகில் வாழும் மக்களுக்கும், அவர்களது உண்மை நிலையினை உணர்த்தி இக,பர இன்பங்களை பெற்றுய்வதற்காவும், காலத்துக்கு காலம் சித்த புரிஷர்களின் வருகையும்,வழிகாட்டல்களும் நிகழ்ந்தவண்ணமே உள்ளது.

மட்டக்களப்பு மண்டூர் பால முனையில் அமைந்துள்ள ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தின் கிளையான ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் எதிர்வரும் பூரணை தினமான திங்கட்கிழமை  (24/09/2018)மகா சமாதியடைந்த பஹவான் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே. முருகேசு சுவாமிகளின் 11 ஆவது ஆண்டு சமாதி தின பிரார்த்தனை வழிபாடுகளும், உலக சேமத்துக்கான பூரணை தின சிறப்பு மகாயாகமுமான முருகேசு சுவாமிகளின் சீடரான ஆன்மீகக் குரு மகா யோகி திரு எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில்  நடை பெறவுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பள்ளேகலையில் பிறந்து வளர்ந்து சிறு வயதிலேயே ஈஸ்வரப்பட்டர் மகரிஷியின் ஆன்மீக அருளாசி பெற்று பின்னர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்று குடும்ப சுமை ஏழ்மை காரணமாக கணக்காளராக வேலையில் சேர்ந்து கஸ்ரப்பட்டாலும்.

ஆன்ம தாகம் அருட்பசி மேலோங்கியும்,இறைவனின் ஈர்ப்பின்பால் தன் அவதாரத்தின் நோக்கத்தினை அறிந்திட பாரத தேசம் சென்று காடு மலைகளிலெல்லாம் அலைந்து திரிந்து ஈற்றில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரரின் தரிசனம் கிடைக்கப் பெற்று அவரையே  மூல குருவாக கொண்டு அகஸ்தியப் பெருமானின் பணிப்பின் பேரில் அவரின் ஆன்ம சீடர் ஸ்ரீ கண்ணையா யோகீஸ்வரரை சுவாமிகள் தன் குருவாக ஏற்று அவரிடம் ஆத்ம ஞானம் பெற்று காயத்திரி சித்தி பெற்று காயத்திரி சித்தரானார்.அதன் பின் தன் அவதார நோக்கம் உணர்ந்து அவரது குருவின் ஆசியுடன் தாய் நாடு திரும்பி இலங்கை மற்றும் உலக மக்களின் உய்வுக்காக ஆலயங்கள் யோகாஷ்ரமங்கள் அமைத்து காயத்திரி மகா யாகங்கள் செய்து மக்களின் ஈடேற்றம் சிறப்புற்று காணப்பட்டது.

மக்களது நோய்ப்பிணி, பசிப்பிணி போக்கிட ஞான உபதேசங்களை இவ்வாறு நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுதிரண்டு நன்மையும் பெற்றார்கள்.ஆனால் அந்த மகா புரிசரின் கலியுக அவதாரம் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. இப்பேற்பட்ட மகா அவதார புருசர் தனது ஆத்தம சீடனோடு இருந்து தன் ஸ்தூல சரீரம் விடுத்து சூட்சுமமாக இருந்து இன்றும் வழிகாட்டி வருகிறார்.

தன் குருவின் பதினோராவது சமாதி தினத்தினை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை  (23.09.2018) மாலை 6.00 மணிக்கு மிக சக்தி வாய்ந்த சஞ்சீவினி மூலிகைகளுடன் அபிசேகத்திரவியங்கள் நிரப்பப்பட்ட1008 சங்குகள், 108 பூரணகும்பங்கள் என்பன வைக்கப்பட்டு, பக்தர்களினால் இரவு முழுவதும் இடைவிடாது1008 தடவைகள் காயத்திரி மஹா மந்திர பாராயணம் செய்யப்பட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி பிரம்ம முகூர்த்த வேளையில் பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பூரண கும்பம் மற்றும் சடங்குகளில் நிரப்பப்பட்டிருந்த அபிஷேக திரவியங்கள் கொண்டு பக்தர்களின் கரங்களினாலேயே திருப்பாத அபிஷேகம் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட மிக சக்தி வாய்ந்த 108 உயிர் மூலிகைகள் கொண்டு, பீடத்தின் குரு சித்தர் மகாயோகி ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளினால், குருபரம்பரையினரான மூலகுரு அகஸ்திய மாமகரிஷி, அருட்திரு பண்டிட் ஸ்ரீ கண்ணையா யோகி மகரிஷி, மகா அவதார புருஷர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் அவர்களுடன் சப்தரிஷிகள், பதிணெண் சித்தர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷி முனிவர்களின் அருள் வேண்டி உலக சேமத்திற்கான மகா யாகம் நடைபெறவுள்ளது. மகாயாகத்தினைத் தொடர்ந்து ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளின் ஆன்மீக அருளுபதேசம், ஆசீர்வாதம் என்பன நிகழ்த்தப்பட்டு, அன்னதானமும் இடம்பெறும்.

மகா சமாதி தின பிரார்த்தனை வழிபாடுகளில் இந்தியாவிலிருந்து யோகிராம் சூரத் குமார் சுவாமிகளின் சீடர்கள் மற்றும் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் பலரும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத் தக்கது.இந்த சிறப்பு வாய்ந்த நன் நாளிலே அனைத்து பக்தர்களும் கலந்து பிரார்த்தித்தால் சகல சௌபாக்கியங்களும் பெற்று இன்புற்று வாழலாம்.

Related posts