மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் – ஜீ.எல்.பீரிஸ்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து விரைவில் உயர்நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு பெற்றால் மாத்திரம் போதாது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்கள் ஆதரவையும் பெறவேண்டும்.

மேலும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து விரைவில் உயர்நீதிமன்றில் மனித உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம்“ என தெரிவித்துள்ளார்.

Related posts