மின்னேரிய கோரவிபத்தில் காரைதீவைச்சேர்ந்த இருபெண்கள் படுகாயம்! கொழும்பில் யூனியன் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்புகையில் சம்பவம்.

(காரைதீவு  நிருபர் சகா)
 

நேற்று (24) நள்ளிரவு மின்னேரியாவில் இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் காரைதீவைச்சேர்ந்த  பொதுச்சுகாதார மருத்துவமாதுக்கள் இருவர் படுகாயமுற்றுள்ளனர்.

 
பொதுச்சுகாதார மருத்துவமாதுக்களான திருமதி குமுதினி புவனேந்திரராஜா   திருமதி சசிகுமார் ஆகியோரே இவ்விதம் படுகாயமுற்றவர்களாவர். பொலநறுவை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்ப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்சமயம் பெண்கள் வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
கொழும்பில் புதனன்று(23) இடம்பெற்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொண்டு இரவுபஸ்ஸில் கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தவேளையில் இக்கோரவிபத்து சம்பவித்துள்ளது.
சாரதியின் பின்னாலுள்ள முன்வரிசை ஆசனத்தில் இவர்கள் அமர்ந்து பயணித்துள்ளார்கள். இவர்களுடன் மாவடிப்பள்ளியைச்சேர்ந்த மற்றுமொரு மருத்துவமாதும் காயமுற்றதாகத்தெரிகிறது.
இவ்விபத்தில் பஸ் சாரதி ஸ்தலத்திலே மரணமானதாகவும் இருபஸ்களிலும்பயணித்த சுமார் 60பேரளவில் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
கொழும்பிலிருந்து கல்முனைநோக்கி வந்துகொண்டிருந்த கல்முனை டிப்போ பஸ்சுடன் கல்முனையிலிருந்து கொழும்’பு  நோக்கிச்சென்ற தனியார் பஸ் மோதியதன்காரணமாக இக்கோரவிபத்து நள்ளிரவுதாண்டி 12.35மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
விபத்து இடம்பெற்று மறுகணம் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அம்புலன்ஸ் மூலம்  பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு நல்ல சிகிச்சை வழங்கப்பட்டுவருவதாக அங்குசென்ற காயப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Related posts