தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால்  தொடர்ச்சியாக நடாத்திவரும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 9 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) மட்டக்களப்பு கிரான் விஸ்ணு ஆலய வளாகத்தில் அனுஷ;டிக்கப்பட்டது.

இறுதி யுத்தத்தில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து உறவினர்களால் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்; ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முதலில் கூட்டுப்பிரார்த்தனையைத் தொடர்ந்து விசேட பூஜையும் இடம்பெற்றது.

பின்பு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தீபச் சுடரை உயிரிழந்தவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், அரசியில் தலைவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு ஏற்றிதோடு மலரஞ்சலியும் இடம்பெற்றன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ். வியாளேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா. அரியநேத்திரன்,  மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக நினைவுச் சுடரேற்றி மலரஞ்லி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related posts