மூன்றாம் நிலைக்கல்வி, தொழில்கல்வி மற்றும் பயிற்சி துறையினை அபிவிருத்தி செய்வதற்கான இணைப்புக்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது

திறன்கள் அபிவிருத்தி, தொலைக்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தக்க இராஜாங்க அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மற்றும் பயிற்சி (TVET) செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 
 
 
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தல் குறிப்பிடப்பட்டகமைவாக  தொழிநுட்ப அடிப்படையிலான சமுகத்தைக் கொண்ட சிறந்த நாட்டை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் 
மாவட்ட மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மற்றும் பயிற்சி (TVET) செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவினூடாக பல்வேறு பங்குதாரர்களின் ஒத்துழைப்பின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தைக்கு திறமையான நபர்களை உருவாக்கி மாவட்டத்தில் வேலையின்மையைக் குறைத்தல் இதன் நோக்கமாகும்.
 
 
அரசாங்க அதிபர் கருணாகரனின் தலைமையில் இடம்பெற்ற இவ்வொருங்கிணைப்புக் குழுவின்கீழ் 7 உபகுழுக்கள் உருவாக்கப்பட்டன. பாடசாலை உபகுழு, கைத்தொழில்துறை உபகுழு, தொழிநுட்ப மற்றும் தொலைக்கல்வி மற்றும் பயிற்சி அபிவிருத்தி உபகுழு, பகுத்தறிவு உபகுழு, தொழில் முனைவு அபிவிருத்தி உபகுழு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தை உபகுழு, தொழில் வழிகாட்டல் உபகுழு என்பன இவற்றில் உள்ளடங்குகின்றன.
 
 
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பங்களிப்புடன் பிரதேச செயலகங்கள், தொழிநுட்பக்கல்லூரிகள், தொழில் கல்வி அதிகார சபை, தேசிய பயிற்சி மற்றும் தொழிற்துறை பயிற்சி ஆணையகம், ஓசியன் யூனிவசிடி, வலயக்கல்வி அலுவலகங்கள் என்பன இதன் பங்குதாரர்களாக செயற்படுகின்றனர்.
 
 
இவ்வொருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போது மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இரவீந்திர சமரவீர, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், உட்பட பிரதேச செயலாளர்கள், பங்குதார அமைப்புக்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related posts