மூன்றாவது நாளாகவும் தொடர் கவண ஈர்ப்பு     போராட்டத்தில் காஞ்சிரங்குடா வீதியில் கிராம சேவகர் இனம் தெரியா நபர்கள் என குற்றம் சுமத்துவதாகவும் மக்கள் விசனம் தெரிவிப்பு 

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரிருந்து தமது சொந்த காணிகளை மீள கையளிக்கும்படி கோரி காஞ்சிரங்குடா விநாயகபுரம் 03 பிரிவு மக்கள் காணி மீட்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அந்தவகையில் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்களது நிலை தொடர்பாக குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மார்கண்டு சுந்தரலிங்கத்திடம்   வினவியபோது.
அவர் இவ்வாறே கருத்துத் தெரிவித்தார்.
இந்த இடத்தில் நான் அறிந்த காலத்திலிருந்தே வசித்து வருகின்றோம் அதுமட்டுமின்றி எனது பாட்டன் காலத்திலும் இங்குதான் நாம் கூலித் தொழில் செய்து எமது ஜீவனோபாயத்தை நடாத்திவந்தோம் அவ்வாறான காலப்பகுதியில் இடம் பெற்ற யுத்தம் மற்றும் இனக்கலவரம் காரணமாக எமது குடும்பத்துடன் சேர்ந்த 30 குடும்பங்கள் இடம்பெயர்ந்து திருக்கோவில் தம்பிலுவில் அக்கறைப்பற்று ஆகிய இடங்களில் வசித்து வந்தோம்.
அவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது யுத்தம் முடிந்த பின்னர் எமது சொந்த இடத்திற்கு திரும்பி எமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்தோம் இதற்கு திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஊடாக எமது காணி அரசகாணி என கூறி எம்மை வெளியேற்ற முற்படுகின்றனர் ஆனால் நாம் ஒரு போதும் எமது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை இது தொடர்பாக கிராம சேவகரிடம் கேட்ட போது நாங்கள் இனம்தெரியாத நபர்கள் என கூறுகின்றனர் எமது காணி எமக்கு வேண்டும் அதற்கு அரசாங்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காணிகள் மீள கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என கருத்துத் தெரிவித்தனர்.

Related posts