யார்_இந்த கலையரசன்?

🤷🏽‍♂️மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணையின் பூர்வீகத்தமிழன்,

👉அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் வாழ்க்கை துணையுடன் வளம் செழித்த மண்ணில் வலிகள் பலசுமந்து வதைகள் பல கண்டும் தமிழ்தேசியத்திற்காய் பற்றுடன் கொள்கை தவறாது சேவைசெய்யும் தொண்டன்.

👉2006, மாவிலையாற்றில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் போர் ஆரம்பித்த பின்பு கிழக்கு மாகாணத்தில் பல இன்னல்களும் அவரங்களும் ஏற்பட்டகாலம்.

👉நாவிதன்வெளியில் கலையரசனை இலக்குவைத்து தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் வலைவிரித்தபோது பல கஷ்டங்களை எதிர்கொண்டு வீட்டை விட்டு மறைவு வாழ்வு வாழ்ந்தார்.

👉அப்போது 22,தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாது கொழும்பில் முடக்கப்பட்ட காலம்.

👉கலையரச்ன் உட்பட அம்பாறைமாவட்டத்தை சேர்ந்த எமது கட்சி பற்றாளர்கள் பலருக்கு இப்படியான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

👉நாம் அவர்களை இரகசியமாக அம்பாறையல் இருந்து கொழும்புக்கு அழைத்துச்சென்று எம்முடன் பாராளுமன்ற மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கவைத்து பாதுகாத்தோம்.

👉நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினராக இருந்து பல அபிவிருத்திப்பணிகளை செய்த இவர் 2012,ல் கிழக்குமாகாணசபை உறுப்பினரானார்.

👉2015, பொதுத்தேர்தலில் சொற்ப வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இவருக்கு கிடைக்கவில்லை.

👉2018 உள்ளூராட்சிசபைதேர்தலில் மீண்டும் நாவிதன்வெளி தவிசாளராக தெரிவானார்.

👉இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்

👉இம்முறை பொதுத் தேர்தலில் (2020) அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக வேட்பாளராக களம் இறங்கி கணிசமான வாக்குகளை பெற்ற ஒருவர்.

👉இன்னும் சொல்லப்போனால் தமிழ்தேசியகூட்டமைப்பு அரசியலில் இவர் உறுதியுடன் உண்மையாக செயல்பட்டமையால் தமது பொருளாதாரத்தில் பெரும்பங்கை இழந்தார்.

👉தமது சொத்துக்களையும் சுகத்தையும பாராமல் தமிழ்தேசியத்தின் கொள்கைக்காக பற்றுறிதியுடன் சோரம் போகாமல் பயணிக்கும் நேரிய தமிழன் தவராசா கலையரன் அவர்களுக்கு அம்பாறை தமிழ்மக்கள் சார்பாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது காலம் கடந்த ஒன்றாக இருந்தாலும் பொருத்தமான ஒருவருக்கு வழங்கப்பட்டதையிட்டுமனதார பாராட்டுவோம் அவரின் சேவை அம்பாறை மண்ணுக்கும் வடக்குகிழக்கு தமிழ்தேசியத்திற்கும் உறுதியுடன் செயல்பட வாழ்த்துவோம்.

✍🏿பா.அரியநேத்திரன்.

Related posts