லயன்ஸ் கழகத்தின் மாதாந்த பொதுக்கூட்டமும் 306 C 2 வலய புதிய தலைவரை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு லயன்ஸ்  கழகத்தின்  மாதாந்த பொதுக்கூட்டமும் 306  C2  வலய  புதிய   தலைவரை கௌரவிக்கும் நிகழ்வு  மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .

 மட்டக்களப்பு மாவட்ட  மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின்  20 , 21  ஆண்டுக்கான  306  C2  வலய  தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள  லயன் எஸ் டினேஷ் ,  நிகழ்வில் விசேட அதிதியாக கலந்துகொண்ட  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்  விஷ்ணு சிவபாதம்  மற்றும்  முன்னாள் லயன் தலைவர்கள்  மற்றும்   லேடி  லயன்ஸ் கௌரவிக்கும் நிகழ்வும்   லயன்ஸ் கழக  மாதாந்த பொதுக்கூட்டமும்  தலைவர்  லயன்   கே . லோகேந்திரன்  தலைமையில் இன்று மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .  நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில்  கலந்துகொண்ட  முன்னாள் லயன் தலைவர்கள்  அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி  ,பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

 இந்நிகழ்வில்   முன்னாள் லயன்ஸ் கழக தலைவர்கள் ,லயன்  கழக பெண் லயன் உறுப்பினர்கள் , லியோ கழக  உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,

Related posts