வசிகரன் அவர்களது சிந்தனையில் உருவாக்கப்பட்ட எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் மூலம் உதவி வழங்கிவைப்பு

எருவில் மண்ணின் மைந்தன் அ.வசிகரன் அவர்களது சிந்தனையில் உருவாக்கப்பட்ட எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் கல்விக்கரம் கொடுக்கும் பணியினை  ஊக்கப்படுத்தும் நோக்கில் சமூகநேயம் உள்ளவர்களின் உதவிகளும் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

 அந்தவகையில் மாங்காட்டுப் பிரதேசத்தில் இம் முறை சாதாரண தரப் பீட்சைக்குத்  தோற்றவுள்ள மாணவனுக்கு உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.

மங்காட்டுக் கிராமத்தினைச் சேர்ந்த இம்மாணவன் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க மாதாந்தம் பிரத்தியேக வகுப்பு மற்றும் வினாப்பத்திரங்கள் என்பன பெற்றுக் கொள்வதற்காகவே இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது

 வெளிநாடு ஒன்றில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தொழில் புரியும் களுத்துறை மாவட்டத்தினைச் சேர்ந்த ஆர்.எஸ்.சிவகுமார் அவர்கள் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் சேவையினைப் பாராட்டியதுடன் இவ் அமைப்பு முன்னெடுக்கும் சமூகப்பணிக்கும் உதவுவதற்கு முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது என பலரும் சுட்டிக்காட்டுவதுடன் அவரது நிதி ஊடாகவே இம் மாணவனுக்கு உதவி வழங்கிவைக்கப்பட்டது.

 இவ் உதவியினை வழங்கிய சிவகுமார் அவர்களுக்கும் அமைப்பின் ஊடாக நன்றிகளைத்தொரிவித்தனர். இந்நிகழ்வில்  பட்டிருப்பு வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி ம.குருபரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அமைப்பின் செயலாளர் ஆசிரியர் ஆர் .ஜீவராஜ்,; அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் 

Related posts