வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு மேலும் 20 கோடி ரூபாவை வழங்கியது ஜப்பான்

இலங்கையின் வட பகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்காக ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத் திட்டம் SKAVITA Humanitarian Assistance and Relief Project (SHARP) மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு Mines Advisory Group (MAG)  ஆகியவற்றுக்கு மொத்தமாக 1,249,997 அமெரிக்க டொலர்களை ( ஏறத்தாழ  20 கோடி இலங்கை ரூபா) வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான மானிய ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா, SHARP அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப். கேணல் வீ.எஸ்.எம்.சரத் ஜயவர்தன மற்றும் MAG அமைப்பின் தொழில்நுட்ப நடவடிக்கை முகாமையாளர் ரொவ்னான் பெர்ணான்டஸ் ஆகியோர்  முற்பகல் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகத்தில் கைச்சாத்திட்டனர்.

Related posts