வடக்கு.வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் அறிவித்தல்

வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரைப் பிரயோகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளை மறுதினம் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது.

“அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதனை கண்டிக்கும் முகமாக எதிர்வரும் புதன் கிழமை காலை 10 மணியளவில் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக போரட்டம் இடம்பெறவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றுள்ளது. ஆனால் நேர்முகத்தேர்வு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் எப்போது , எதுவரை வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவலை குறித்த அமைச்சு வெளியிடவில்லை.

இதன் பொருட்டு ‘எழுத்துபூர்வமாக 35 வயதிற்கு மேற்பட்டவர்களையும்’ ‘2017 வேலையற்ற பட்டதாரிகளையும்’ உள்வாங்குதல் வேண்டும் எனவும் ‘பட்ட சான்றிதழ் இறுதித் திகதியின் அடிப்படையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்குதல் வேண்டும்’ என கொழும்பில் நடந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நீர் வீச்சு மேற்கொள்ளப்பட்டு எமது தொழில் உரிமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட 35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய அமைச்சுக்கு பெயர் விபரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், அன்றைய தினம் வருபவர்களின் பெயர் விபரங்கள் மட்டுமே எம்மால் வழங்கப்படும்” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts