வறிய மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வறிய நிலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வெளிச்சம் சுவிஸ் அமைப்பானது உறவுக்கு கைகொடுப்போம் என்ற தொணிப்பொருளில் பிரதேசத்திலுள்ள வாழ்வின் உதயம் மாற்றுத் திறணாளிகள் அமைப்புடன் இணைந்து ஒரு தொகை கற்றல் உபகரணங்களை இன்று வழங்கி வைத்தனர்.

வாழ்வின் உதயம் மாற்றுத்திறணாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவனேசராஜா,சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் க.ஜெகதீஸ்வரன்,வெளிச்சம் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் த.சத்விதன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts