வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை

வவுணதீவில் நடைபெற்ற குற்றச்செயல்களைக்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்றார் அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன் 

 20 ஆம் திகதி அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துருந்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்…………………
முன்னாள் போராளிகள் 30 வருட காலமாக பல துன்பங்களை அனுபவித்து வந்துள்ளனர் அந்தவகையில் அவர்கள் யுத்தம் முற்றும்பெற்றதன் பின்னர் வாழ்வாதார வசதிகள் இன்றி இன்னும் பல சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர்.
இவ்வாரான சந்தர்ப்பங்களில் முன்னாள் போராளிகளை அப்பட்டமான பொய்களை சுமத்தி கைது செய்வதும் அவர்களை சிறைக்குள் தள்ளுவதும் மிகவும் வருத்தத்திற்கு உரிய விடயமாகும்.
இந்த அரசாங்கம் மிகவும் திட்டமிட்டு செயற்படுகின்றன காரணம் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு முன்னாள் போராளிகளே காரணம் என திட்டவட்டமாக கூறுகின்றனர் அந்தவகையில் கடந்த 30 ஆம் திகதி வவுணதீவு பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் தொடர்புடையதாக கூறப்படும் அஜந்தன் மற்றும் சர்வேஸ்வரன் என்பவர்கள் தாமாகவே பொலீஸாரிடம் சரணடைந்தவர்கள் இவ்வாரான சந்தர்ப்பங்களில் அவர்களே குற்றம் செய்தவர்களாக சித்தரிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்.
ஆனால் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் உரிமைகளுக்காக போராடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தின் இணைப்பாளர் வடிவேல் சசிதரன் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts