விவசாய திணைக்களத்தினால் பயிர் சிகிச்சை முகாம் மாலையர்கட்டில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மண்டூர் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவின் மாலையர்கட்டு கிராமத்தில் பயிர்ச் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது.
 
மண்டூர் விவசாய போதனாசிரியர் பீ.பிரமேந்ராவின் வழிகாட்டலில் தொழிநுட்ப உத்தியோகத்தர் கே.கிலசனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா அவர்கள் அதிதியாக கலந்து கொண்டார்.
 
இதன்போது அக்கிராமத்தில் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பயிர்களில் ஏற்பட்டுள்ள நோய் பீடைத் தாக்கங்களின் மாதிரிகள் விவசாயிகளால் கொண்டுவரப்பட்டிருந்தது. அம்மாதிரிகளின் நோய் பீடைத் தாக்கங்கள் விவசாய போதனாசிரியர்களால் இனங்காணப்பட்டு அதனை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடைமுறைகள் தெளிவூட்டப்பட்டதுடன். தீவிர தாக்கத்தின் போது மட்டுமே சிபார்சுக்குரிய இரசாயனம் விசிறுவதற்கு அறிவூட்டப்பட்டது. பெரும்பிலும் விவசாயிகள் இரசாயன விற்பனை நிலையங்களில் நோய் தாக்கத்தை சொல்லி இரசாயனம் வாங்கும் போது விலையுயர்ந்த இரசாயனங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் நோய் பீடை கட்டுப்பாடு குறைவாகவே உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்ததுடன். பண வீண்விரயத்தையும் நஞ்சற்ற விவசாயத்தையும் ஊக்குவிக்கும் நோக்குடனேயே விவசாயிகளின் இடத்திற்கே சென்று மட்டக்களப்பு மாவட்ட  விவசாய திணைக்களத்தினால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிரந்தர பயிர்ச் சிகிச்சை முகாங்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts