வெலே சுதாவின் உதவியாளர் ஹெரோயினுடன் கைது

 பிலியந்தலை – மாவித்தர பகுதியில் வெலே சுதாவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து சுமார் 2 கிலாகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி இரண்டரைக் கோடி ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கியொன்றும் ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts