வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சாதாரணதர விழா.

சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சாதாரணதர விழா 28 ஆம்திகதி  புதன்கிழமை  அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளிக்கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து வேப்பையடி வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி ஜெ.அனீஸ் மற்றும் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

 

Related posts