1000சோட்டிகள் 1000சாறன்கள் வழங்க கோடீஸ்வரன் தயாராம்! முதலில் அவர் ஒருசோட்டியை போடுவது நல்லது என்கிறார் கருணாஅம்மான்.

இம்முறை தேர்தலுக்குமுதல் கடைசிநாட்களில் வாக்குப்பிச்சைக்காக
1000சோட்டிகளையும் 1000சாறன்களையும் தயார்செய்து வருகின்றாராம்கோடீஸ்வரன்நல்லவிடயம். முதலில் அவரொரு சோட்டியை போடுவது நல்லது. அதுதான் இனிஅவருக்கு பொருந்தும்.
 
இவ்வாறு  காரைதீவு கடற்கரைவீதியில் இடம்பெற்ற தேர்தல்
பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும்அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட தலைமை வேட்பாளருமாகிய கருணா
அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் ஹாஸ்யமாக
உரையாற்றினார்.
 
அங்கு கருணா அம்மான் மேலும் உரையாற்றுகையில்:
 
பாரிய யுத்தத்தில் முன்னணித்தளபதியாக இருந்தவன் நான். எனவே யுத்தத்தில்யாரும் கொல்லப்படவில்லை என்று பொய் சொல்லலாமா? யுத்தமென்றால்இருதரப்பிலும் இழப்புகள் வரத்தான் செய்யும்.
 
அதுதெரியாமல் காரைதீவு சேர்மன் ஒரு கதையைக்கூற நானொன்றைச்சொல்ல அதுஇலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் எனக்கு இலவச விளம்பரத்தைபெற்றுத்தந்தது.
 
எந்த ரேடியோவை திறந்தாலும் எந்த ரி.வி சனலைப்போட்டாலும் “கருணா..
கருணா..” என்றுதான் சொன்னது. ரி.வி.யில் விளம்பரமொன்று போடுவதனால்20லட்சருபா செலவழிக்க வேண்டிவரும்.. அதை இலவசமாக பெற்றுத்தந்ததுசேமன்தான். அவரைப்பாராட்டவேண்டும்.உண்மையில் காரைதீவு சேமனுக்கு நான்பொன்னாடை போர்த்தவேண்டும்.
 
அன்ரன் பாலசிங்கத்தின் கால்செருப்புக்கும் பெறுமதியில்லாத சுமந்திரன்
அரசோடு இணையப்போகிறராம். போய்கேட்டா பிரதமர் எட்டி உதைப்பார்.கல்முனையில்சுமந்திரனுக்கு பெண்கள் செருப்பால் அடித்தது விரட்டியது ஞாபகமிருக்கிறதா?
 
ரி.என்.ஏ ஒழுங்காய் சேவைசெய்திருந்தால் நான் ஏன் இங்குவருகிறேன்.
கோடிஸ்வரன் ஒழுங்குமுறையாக அதைவிட்டு வந்தால் ஏற்றுக்கொள்வோம்.
 
தினம் தினம் எமதணியில் பலர்வந்து கைகோர்க்கின்றனர். அக்கரைப்பற்றில்ஈரோஸ் அணி கல்முனையில் ஈபிஆர்எல்எவ் மாவட்டஅமைப்பாளர் புண்ணியநாதன்நாவிதன்வெளி உறுப்பினர் யோகநாதன் பெரியநீலாவணையில் ஒரு முக்கியஸ்தர்.ஓரிருதினத்தில் த.தே.கூட்டமைப்பின் ஒருபுள்ளியும் வந்துசேரவுள்ளார்.இன்னும் பல கற்றறிந்தோர் புத்திஜீவிகள்கல்விமான்கள் திரைமறைவில்பூரணஆதரவு தருகிறார்கள்.நானே எண்ணப்பார்க்காதளவு ஆதரவு மாவட்டத்தில்
மட்டுமலல புலம்பெயர்தேசத்திலிருந்தும் கிடைக்கின்றன.
 
அம்பாறை மாவட்டத்தின் முக்கிய ஊரான காரைதீவு எனது வெற்றியைத்
தீர்மானித்துவிட்டது. எனவே வெற்றி நிச்சயமாகிவிட்டது. வழமையாக
தமிழர்களின் 60வீத வாக்களிப்பை நாம் 100வீதமாக்கவேண்டும். எனது வெற்றி100வீதம் மக்களுக்காகவே தவிர எனக்கானதல்ல. என்றார்.

Related posts