14தினங்களுக்குப்பின் திறக்கப்பட்ட காரைதீவுமக்கள்வங்கி.

கொரோனாத்தொற்று காரணமாக 14நாட்கள் மூடப்பட்டிருந்த காரைதீவு மக்கள் வங்கிக்கிளை மீண்டும் நேற்று திறக்கப்பட்டது.
 
முகாமையாளர் தி.உமாசங்கரன் உள்ளிட்ட ஊழியர்கள் சமுகமளித்திருந்தனர். இருந்தபோதிலும் ஏலவே தொற்றுக்குள்ளான 3ஊழியர்களும் 21தினங்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதால் அவர்கள் வங்கிக்கு சமுகமளித்திருக்கவில்லை.
 
ஆதலால் வங்கிச்சேவைகள் சிரமத்தின் மத்தியில் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் நேற்று நடைபெற்றதைக்காணமுடிந்தது.வாடிக்கையாளர்களும் குறைவாகவே காணப்பட்டனர்.
 
காரைதீவு மக்கள்வங்கிக்கிளையில் 3 ஊழியருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வங்கி உடனடியாக மூடப்பட்டிருந்தமை தெரிந்ததே.
 
இதேவேளை சாய்ந்தமருது மக்கள் வங்கிக்கிளையில் பணியாற்றும் முகாமையாளர் உள்ளிட்ட ஜந்து ஊழியர்;களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து சாய்ந்தமருதுக்கிளைஉடனடியாக மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச்சென்று தமது கருமங்களை நிறைவேற்றிக்கொள்ளுமாறு முகாமையாளர் அறிவித்தல் விடுத்திருக்கிறார்.
சாய்ந்தமருதுக்கிளை 14நாட்கள்  மூடப்பட்டிருக்கும்.

Related posts