2021 ஆம் ஆண்டின் சிறந்த கூட்டுறவுச் சங்க தலைவர் விருதினை பெற்றுக் கொண்டார்.

( அஸ்ஹர் இப்றாஹிம் )

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தருமான எம்.எம்.உதுமாலெவ்வை 2021 ஆம் ஆண்டின் சிறந்த கூட்டுறவுச் சங்க தலைவர் விருதினை பெற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி  மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்  என்பன இணைந்து 2021 ஆம் ஆண்டின் கூட்டுறவு விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் செங்கலடி  செளபாக்கியா கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில்  சிறந்த கூட்டுறவுச் சங்க தலைவருக்கான விருதினை எம்.எம்.உதுமாலெவ்வை பெற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் திருமதி கலாமதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்விருதினை வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினை எம்.எம்.உதுமாலெவ்வை தலைமையிலான இயக்குநர் சபை கடந்த 2016 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு வகையில் கூட்டுறவுச் சங்கத்தினை இலாபமீட்டும் வகையில் முன்னெடுத்து செல்வதுடன் பல சமூக நலத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொவிட் – 19 தொற்றினால் நாடு முடக்கப்பட்ட போது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு மானிய அடிப்படையில் பொருட்களை பொதி செய்து வழங்க மாவட்டத்தின் கூட்டுறவுச் சங்கங்களை கேட்டுக் கொண்ட போதிலும் கூட்டுறவுச் சங்கங்கள் பின் வாங்கின.. இருந்தும் சாய்ந்தமருது கூட்டுறவுச் சங்கமும் அதன் தலைமையும் துணிந்து மாவட்டத்தின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இந்நிவாரணப் பணியினை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்..
இவ்விழாவின்  சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கமும் சிறந்த கூட்டுறவுச் சங்கமாக தெரிவுசெய்யப்பட்டது.

Related posts