30 வயதுக்கும் மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் முப்பத்து ஆறு சதவீதம் பேர் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர்

இலங்கையில் 30 வயதுக்கும் மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் முப்பத்து ஆறு சதவீதம் பேர் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் ரஞ்சித் படுவந்துடுவ தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் இலக்குக்கு உட்பட்ட மக்களில் 70% பேர் முதல் அளவு தடுப்பூசி பெற்றதாகவும், 25% இரு அளவுகளையும் பெற்றுள்ளனர்.

மேல் மாகாணத்தின், கம்பஹா மாவட்டத்தில் 66% பேருக்கு முதல் அளவு வழங்கப்பட்டது, 21% மானோர் இரு அளவுகளையும் பெற்றுள்ளனர்.களுத்துறை மாவட்டத்தில், 54% மக்கள் முதல் அளவைப் பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் 20% பேருக்கு இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை ஜூலை மாத இறுதிக்குள் மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட ஜனாதிபதி நிர்ணயித்த இலக்கை அடைய சுகாதார அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் ரஞ்சித் படுவந்துடுவ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நாடு முழுவதும் 30 வயதிற்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 13% வீதமானோர் தடுப்பூசிகளின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts