30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருக்கலாம் – சம்பந்தன்

30 வருட யுத்தத்திற்கு செலவிட்ட பணத்தை மக்களிற்காக பயன்படுத்தியிருந்தால் நாம் முன்னேற்றம் அடைந்திருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், “இந்த பகுதி மக்கள் மிகவும் வறிய மக்கள். அவர்களின் நிலைமை மாற்றியமைக்க வேண்டும்.

நாம் 30 வருடம் யுத்தம் செய்தோம். அதற்காக அநேகமான பணத்தையும் செலவு செய்தோம். அந்த பணத்தை யுத்ததத்திற்கு செலவழிக்காமல் மக்களிற்காக பயன்படுத்தியிருந்தால் நாம் முன்னேற்றம் அடைந்திருப்போம்.

இந்த நாட்டில் ஏனைய மாகாணங்கள் முன்னேறியுள்ள போதிலும் நாம் பின்னோக்கியே சென்றுள்ளோம். இந்த நிலைமை மாற வேண்டும்.

எமக்கு பெறுமதியான ஒரு ஜனாதிபதி கிடைத்துள்ளார், நாட்டை ஒற்றுமைப்படுத்தும் ஒருவர் கிடைத்துள்ளார்.

நாட்டை பிரிக்காமல், ஒரே நாட்டிற்குள், சகல மக்களையும் இணைத்ததாக, அதிகாரித்தை அந்த மாகாணங்களுக்கு வழங்கி, மக்கள் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கேட்கிறோம்.

அந்நிலையாமி ஏற்பட வேண்டும், அது நடைபெறும் என நம்புகின்றோம். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து நாட்டையும், மக்களையும், எதிர்கால சந்ததியினரையும் முன்னேற்ற வேண்டும்.” என கூறினார்.

Related posts