32பேரில் ஒருவர் தொற்றாளர்!மாவடிப்பள்ளியில் ஒருவர் மரணம்!!

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் நேற்று  மேற்கொண்ட 32 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகளில் 01 நபருக்கு கொவிட்-19 தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன். ஏனைய அனைத்து பரிசோதனை முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது.
 
மேலும் 25 PCR மாதிரிகளும் எடுக்கப்பட்டன. என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
 
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின்  வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு  பொது சுகாதார பரிசோதகர் குடும்ப நல உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நுளம்பு தடுப்பு பிரிவினர் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் இணைந்து மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
 
இதேவேளை காரைதீவுப்பிரிவில் 3வது கொரோனா மரணம் இடம்பெற்றுள்ளது. மாவடிப்பள்ளியில் இந்த மரணம் சம்பவித்துள்ளது. இதுவரை மாவடிப்பள்ளயில் இருவரும் காரைதீவில் ஒருவருமாக மூவர் மரணித்துள்ளனர்.
 

Related posts