36 வருட கல்விச் சேவையில் இருந்து இன்றுஓய்வுபெறும் கி.செல்வராசா

(சா.நடனசபேசன்)

சம்மாந்துறை கல்விவலயத்தின் ஆசிரிய மத்தியநிலைய முகாமையாளர் அதிபர் தரம் 1 ஐச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை செல்வராசா தனது 36 வருட கல்விச் சேவையில் இருந்து  2 ஆம் திகதி ஓய்வுபெறுகின்றார்.

இவர் அம்பாரை மாவட்டத்தின் நாவிதன்வெளியினைப் பிறப்பிடமாகவும் நற்பட்டிமுனையினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1984 ஆம் ஆண்டு ஆசிரியராக முதல் நியமனம் பெற்று பதுளை மடுல்சீம மகாவித்தியாலயத்தில் கடைமையாற்றி தெகிகல தமிழ் மகாவித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் 1989 இல் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் வணிகப்பிரிவுஆசிரியராகவும் உதவி அதிபராகவு செயற்பட்டார்அக்காலகட்டத்தில் ஆசிரியசங்கச்செயலாளர்,நலன்புரிச்செயலாளர்,பழையமாணவர்சங்கச்செயலாளர் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் உட்பட பலபொறுப்புக்களில் இருந்து சேவையாற்றியுள்ளார்.

2003 ஆம் ஆண்டு நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்று சேவையாற்றியதுடன் 2008 ஆம் ஆண்டு சம்மாந்துறை வலய ஆசிரிய முகாமையாளராக நியமனம் பெற்று ஆசிரியர்களின் வாண்மைவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்துவந்துள்ளார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியினை கார்மேல் பாற்றிமா தேசியபாடசாலையிலும் கல்விகற்று பின்னர் ஸ்ரீ ஜெயவத்தனபுர மற்றும் யாழ்பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விஞ்ஞான மாணி வியாபார நிருவாகத்துறையில் சிறப்புப்பட்டம் பெற்றுள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் 1994 ஆம் ஆண்டு பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும்,யாழ் பல்கலைக்கழகத்தில் 2005 ஆம்  ஆண்டு கல்வி முதுமாணிப்பட்டம் பெற்றதுடன்  2017 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை வழிகாட்டல் ஆகிய பட்டங்களைப் பெற்றதுடன் தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிக்கான கல்முனைப்பிராந்தியத்திற்கான போதனாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். 2009 நடைபெற்ற இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

அதேவேளை அகில இலங்கை சமாதான நீதவான், கல்முனை மத்தியஸ்தர் சபை உறுப்பினர்,கல்முனை சமாதானமும் சமூக நல்லிணக்கமும் அமையத்தின் உறுப்பினர்,கல்முனை கனேடிய நற்புறவுக்கழகத்தின்செயலாளர், கல்முனைத்தொகுதி இந்துமாமன்ற உறுப்பினர் ஆகிய சமூகப்பணிகளும்  நாவிதன்வெளி முத்துமாரியம்மன் ஆலய செயலாளராகவும் இன்னும் பல ஆலயங்களின் முக்கிய உறுப்பினராகவும் சேவையாற்றியதுடன் தற்போது பல ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் போசகராகவும் செயற்பட்டுவருவதுடன் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கும்,உயர்கல்விபெறவும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறவும் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts