(சிரேஷ்ட ஊடகவியலாளர் சகாதேவராசா)
இந்துசமயவிவகார அமைச்சின் இந்துகாலாசாரத்திணைக்களம் முதன்முதலாக நடாத்தும் ‘தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019’ நாளை (2) திங்கள் பிற்பகல் 2.30மணிக்கு கொழும்பு தாமரைத்தடாகத்தில் நடைபெறவிருக்கிறது.
தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இவ்விருதுவழங்கும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழர்தம் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளைத் தனியே பேணிப் பாதுகாத்து ஊக்குவித்துத் தம் வாழ்நாளிற் பெரும் பகுதியை இக் கலைகளுக்காகவே அர்ப்பணித்து வாழுகின்ற கலைஞர்களை அங்கீகரித்தும்; வளரும் இளங் கலைஞர்களை ஊக்குவித்தும் ‘தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019’ எனும் பெயரில் நடாத்தப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த யூலை மாதத்தில் ஊடகங்கள் வாயிலாக கோரியிருந்தோம். அதன்படி நாடளாவியரீதியில் 1800 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றிpருந்து எமது நடுவர் குழாம் தேர்வாணைக்குழு 212கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
; இந்த 212கலைஞர்களோடு மேலும் 17வாழ்நாள் சாதனையாளர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.என்று பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழர் தம் கலைகள் மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் மரபுவழி மற்றும் நவீன கலை வடிவங்களைப் பேணிக்காக்கவும் பாடல் வாத்தியம்நாட்டியம்அறிவிப்புநெ றியாள்கைசினிமாகிராமியக்கலைகள் மற்றும் நுண்கலைகள் முதலான பல்துறைக் கலைஞர்கள் மூன்று வயதுப்ப்பிரிவினர் மூன்று வௌ;வேறு பெயரிலான பட்டங்கள் வழங்கப்பட்டு இவ் அரச விருது விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.