நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிரன் பிரதேச மாவெட்டுவான் அணைக்கட்டுக்கான அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 19 குளங்களும் 6 அணைக்கட்டுகளும் இவ்வாண்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 
தேசிய ரீதியான இவ் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிகழ்வுகள் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவெட்டுவான் அணைக்கட்டு புனரமைப்பதற்கான  அடிக்கல் நட்டுவைக்கும் நிகழ்வுடன் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 
 
மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாவட்டுவான் அணைக்கட்டிற்கான அடிக்கல் நட்டு வைத்ததுடன், பெயர்ப்பலகையினையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். 
 
இவ்வணைக்கட்டினை அமைப்பதனூடாக மாயவட்டை, பேரில்லாவெளி மக்களின் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு சிறுபோகத்திற்கான நீர்ப்பாசனத்தினை வழக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் பெரியிலாளர் என். நாகரத்தினம், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், கோரளைப்பற்று தவிசாளர் திருமதி. சோபா, கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு மற்றும் நீர்ப்பாசன, விவசாய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள் மாயவட்டை கிராம பொதுமக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர். 

Related posts