சிறுவர் மற்றும் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோக
தடுப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்ததல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலமையில் மாவட்ட செயலக
கேட்போர் கூடத்தில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இதன்போது உதவி
மாவட்ட செயலாளர் அ.நவேஸ்வரன், சிரேஸ்ட நன்னடத்தை
உத்தியோகத்தர் எம்.எம்.எச்.நயிமுடீன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தருக்கான மாவட்ட இணைப்பாளர் வீ.குகதாசன் மற்றும் நன்னடத்தை அலகுப் பொறுப்பதிகாரிகள், மாவட்ட சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, நன்னடத்தை உத்தியோகத்தர்கள் தேசிய
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு
உத்தியோகத்தர், உள சமூக உத்தியோகத்தர், மற்றும் உளவளத்துணை மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலின் போது தற்போதைய அவசர சூழ்நிலையின் நிமிர்த்தம் பெண்கள் மற்றும்
சிறுவர்களுக்கு எதிராக ஏற்படக் கூடிய சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குமான தடுப்பு
பொறிமுறை ஒன்றினை உருவாக்கும் வகையில் பல்துறைசார் இவ்வணி
யினரின் கருத்துக்கள் பகிரப்பட்டதுடன். எதிர்காலத்தில் உரிய பல்துறைசார்
அணியினர் அனைவரும் ஒன்றிணைந்து கிராம மட்டத்தில் இருந்து மாவட்ட மட்டம் வரை உள்ள தற்பேதைய பொறிமுறையினையும் அதேநேரம் பயனாளிகள் இலகுவாக அரச பொறிமுறையினை அணுகி தமது பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையிலான குறுங்கால திட்டம் ஒன்றை உருவாக்கி செயற்படும் பொருட்டும் மாதம் ஒரு முறை இவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொள்வது எனவும்
தீர்மானிக்கப்பட்டதுன்
சிறுவர் பெண்கள் பாதுகாப்ப தொடர்பாக பிரதேச செயலகங்களின் சிறுவர் பெண்கள் அபிவிருத்திப்பிரிவு மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும்
நன்னடத்தை அலகுகளின் செயற்பாடுகள் தொடர்ந்து அரச சுற்று நிருபங்கள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம் பெறுவதுடன் சிறுவர்
பெண்களின் நலன் கருதி இப்பணிக் குழாமினரை மக்கள் அணுகி தங்களின் பிரச்சனைகள் அல்லது பராமரிப்பு, பாதுகாப்பு சார் நடவடிக்கைகள் குறித்து
ஆலோசனைகளை 1929 அவரச தொலைபேசி மூலமாகவும் அல்லது
காரியாலய நாட்களில் நேரடியாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என்ற
தீர்மானங்களுடன் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.