யுத்தகாலத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்டு அவர்களின் அடிப்படை உடமைகளை இழந்து நிற்கதியாகி வாழ்கின்ற இந்த உறவுகளின் அன்றாட பிரச்சனைகளுக்கு எவ்விதமான அரசியல் தலையீடுகள் இல்லாமல் நேர்மையான முறையில் அவர்களுக்கு கரம் கொடுப்பேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தத்தின் போது எமது நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மூவின மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள் அதிலும் அதிகமான இடம்பெயர்வுகள் உடமைகள் இழப்பு உயிர்சேதங்கள் என பாதிக்கப்பட்வர்கள் எமது தமிழ் மக்களே.அதிகமாக நான் செல்லும் இடங்களேல்லாம் கிராமப்புற மக்களிடம் உள்ள குறைபாடுகள் குடிநீர் வசிப்பதற்கு நிரந்தர இடங்கள் இல்லாமல் வாழ்வபர்களேயே என்னால் பார்கமுடிகின்றது. இது எனக்கு மிகவும் வேதனையழிக்கின்றது எனத் தெரிவித்தார்.
உங்களிடத்தில் என்ன பிரச்சனைகள் உள்ளதோ என்னிடம் நேரடியாகவோ தொலைபேசியிலோ எடுத்துக்கூறுங்கள் உங்கள் அனைவருக்கும் கரம் கொடுக்க காத்திருக்கின்றேன்.
மண்டூர் பூச்சிக்கூடு,நவகிரி நகர் மக்களின் அன்றாட பிரச்சனைகள் தேவைகளை கேட்டறிந்து தீர்வுகொடுக்கும் வகையில் இக்கிராம மக்களினுடனான சந்திப்பு நேற்று 30 ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றிருந்தது. இற்சந்திப்பின்போது சீரான வீதிகள் செப்பனிடாமல் இருப்பது காட்டு யானைகளின் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்துகொள்வது விவசாய மற்றும் குடிநீர் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்று தருவதற்கு உறுதியழித்துள்ளார்.