கைப்பணிப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி பிரதேத்தில் கைப்பணிப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு (3) புதன்கிழமை இடம் பெற்றது.
படுவான்கரைப் பிரதேச கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் உள்ளுர் கைப்பணிப் பொருட்களை அதன் தரத்திற்கு அமைவாக நியாயமான விலைகளுக்கு உற்பத்தியாளர்கள் விற்பனை செய்வதற்கு உரிய விற்பனை நிலையம் இப்பிரதேசத்தில் இல்லாத நிலையில் அப்பிரதே மக்களின் வேண்டுதலுக்கிணங்க இந்நிலையத்திற்கு 8 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
 
இதற்கான நிதியினை மீள்குடியேற்ம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினூடாக 2 மில்லியன் ரூபாவும், பிரதமர் மற்றும் தேசிய கொள்கைகள்; பொருளாதார விவகாரங்கள் அமைச்சினூடாக 6.5 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டிருந்தது இந்நிதியினை ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் வேண்டுதலுக்கிணங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
 
மீள்குடியேற்ம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பிரதமர் மற்றும் தேசிய கொள்கைகள் மற்று பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வேண்டுதலுக்கிணங்க ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி அவர்களினால் இதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயளாளர் ஆர்.இராகுலநாயகி  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள்,பொதுமக்கள எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts