இலங்கைக்கு கடத்தப்படும் தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் அளவு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

கடல் மற்றும் வான் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை சுங்கம் சுட்டிக்காட்டியது.

இலங்கை சமூகத்தில் தங்க நகைகளுக்கு எப்போதும் சிறப்பிடமுண்டு.

சுப மங்கள கருமங்களின் போது எம்மை அலங்கரிக்கும் தங்க நகைகள், சில அவசர சந்தர்ப்பங்களில் கடனுதவிகளைப் பெறவும் பயன்படுகின்றன.

இதனால் தங்க நகைகளை சேமிக்கும் பழக்கம் இலங்கையர்கள் மத்தியில் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.

இலங்கையின் தங்க உற்பத்திகளுக்கு சர்வதேச நற்பெயர் இருக்கின்ற போதிலும், அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற தங்கக் கடத்தல்கள் அந்த நற்பெயருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மீனவர்கள் என்ற போர்வையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்படுகின்றது.

வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 18 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் தரவுகள் கூறுகின்றன

Related posts