கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின் போதும் ஒவ்வொரு காரணம் கூறப்பட்டு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டு வருவதை நாம் அவதானிக்க முடியும்.ஆனால், உண்ணாவிரதக் கைதிகள் ஒவ்வொரு நிமிடமும் சாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். காலதாமதம் செய்யப்படும் ஒவ்வொரு நாட்களும் அவர்கள் சாவை நோக்கித் தள்ளப்படும் நாட்களேஇவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில்,

அநுராதபுரத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களை மன்னிப்பின் கீழ் விடுவிக்கும்படி அல்லது குறுகியகால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுமாறு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனகடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் எவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலும் நீதிமன்ற விசாரணைக்கும் உட்படுத்தப்படாமலும் உள்ள நிலையில் சிறைவாசம் அனுபவித்து தமிழ் அரசியல் கைதிகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்துவது இதுதான் முதல்தடவையல்ல.ஒவ்வொரு முறையும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவதும் அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக அலட்சியப் போக்கைக் காட்டுவதும் அவர்கள் சாவின் விளிம்பை அடையும் நிலையில் சில வாக்குறுதிகளை வழங்கிப் போராட்டங்களை நிறுத்திவிட்டுப் பின்பு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விடுவதும், அதற்கும் சட்டக் காரணங்களை முன்வைப்பதும் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக உள்ளனஇந்தக் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் நியமங்களுக்கு விரோதமானது எனவும் அது நீக்கப்பட வேண்டும் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கையும் இணங்கியிருந்தது.

இணக்கம் காணப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் போதும் அந்த மனிதகுல விரோதச் சட்டம் நீக்கப்படவில்லை.அது மட்டுமின்றி தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் இலங்கை அரச தரப்பால் நீக்கப்படவுள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்தான்கைதிகள் விடுதலை தொடர்பாகப் பிரச்சினைகள் முன்வைக்கப்படும் போது இந்தச் சட்டமே காண்பிக்கப்படுகின்றது. அரசியல் கைதிகள் விவகாரம் நியாயத்தின் அடிப்படையில் நோக்கப்படாமல் இனக்குரோத அடிப்படையிலேயே நோக்கப்படுவதாக நாம் கருதுகின்றோம்

Related posts