சுவிஸ் உதயம் ஆரம்பிக்கப்பட்டது ஏழை மக்களுக்கு உதவிசெய்வதற்காகவே. க.துரைநாயகம்.

சுவிஸ் உதயம் ஆரம்பிக்கப்பட்டது ஏழை மக்களுக்கு உதவிசெய்வதற்காகவே தவிர தனிப்பட்ட நபர்களது சுயலாபத்திற்காக அல்ல என்பதனை புரிந்துகொண்டு அனைவரும் சமூக நோக்குடன் தங்களது சேவைகளை முன்னெடுக்கவேண்டும் என சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் தெரிவித்தார்.
சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் உதவி பெறுவோருடனும் உதவிபெறவுள்ளோர்களுடனுமான கலந்துரையாடல் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் ; தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் 17 ஆம்திகதி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் பிரதித் தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் க.வரதராஜன் சுவிஸ் உதயத்தின்; செயலாளர் க.குவேந்திரன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கிழக்குமாகாண மகளீர் அணித் தலைவி திருமதி.செல்வி மனோகர், கணக்குப் பரிசோதகர் சு.நாகேந்திரன் சுவிஸ் நாட்டில் வசிக்கு சி.பரமேஸ்வரமூர்த்தி,செவஸ்ரியன் (தம்பி) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் பேசுகையில் கடந்தகாலத்தில் இந்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தமிழ்ச்சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இச்சமூகம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவைக்கண்டுள்ளது. அவ்வாறானவர்களை இனங்கண்டு உதவிகளை மேற்கொண்டு சமூகத்தினை முன்னேற்றவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது.
இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் செயற்படவேண்டும் தனிப்பட்ட தேவைகளுக்காக பொது அமைப்பை யாரும் பயன்னடுத்தமுடியாது என்பதனை உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும் என்றார்.
இதே வேளை சுவிஸ் உதயத்தின் ஒருங்கமைப்பாளரும் தற்போதைய தலைவருமான டி.எல். சுதர்சன் மற்றும் செயலாளர் அன்பளவாணர் ராஜன் பொருளாளர் க.துரைநாயகம் உபதலைவர் கே.தியாகராஜா, உபசெயலாளர் எஸ். சுபாஸ்கோ, உப பொருளாளர் வி.பேரின்பராசா, உறுப்பினர்களான கே.திவாகரன், ஜெசிந்தாஅன்ரன்,வி.கனகசுந்தரம்,வி.எட்வேட்,எம்.மதிவதனன்,எஸ்.வரதராஜன், பி.ஜெயதரன் மற்றும் கணக்காய்வாளர்களான திருமதி ராதிகா திவாகரன் ,திருமதி சாந்தினி சிவஞானசுந்தரம் உட்பட உறுப்பினர்கள் அனைவருக்கும் உதவிபெறும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related posts