பார்வையிழந்த 130 பேருக்கு கண் வெண்புரை சத்திர சிசிச்சை செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வையிழக்கப்பட்டு பார்வையற்றவர்களாக காணப்பட்ட130 பேருக்கு இலவசமாக கண் வெண்புரை சத்திர சிசிச்சை செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பல்வேறு இழப்புக்களை சந்தித்த மட்டக்களப்பு  தமிழ்மக்கள் அன்றாடம் பல்வேறு கஸ்டத்தில் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.இவர்கள் பல்வேறு கஸ்டங்கள், சவால்கள் நிறைந்த துன்பகரமான எதிர்காலத்தை நோக்கியே தாங்கள் நோயாளியாக அன்றாடப்பொழுதை கழிக்கின்றார்கள்.

இவர்களுக்கான மனிதபிமானப்பணியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நண்பர்கள் மேற்கொண்டு வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள்(பிரித்தானியா கிளை)மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் இணைந்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் போதனா வைத்தியசாலையில் வைத்து பார்வையிழந்த 130 பேருக்கு இலவசமாக கண் வெண்புரை சத்திரசிசிச்சை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்யப்பட்டுள்ள கண் வெண்புரை சத்திர சிசிச்சையானது தற்போது வைத்தியசாலையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் (பிரித்தானியா கிளை)அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்களான திருமதி. காந்தா நிரஞ்சன்,கே.பாலசுப்பிரமணியம்,ராதா தருமரெத்தினம்,திருமதி. சவுந்தலா பாலசுப்பிரமணியம் மற்றும் தாதியர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆறுதல் சொல்லி வருகின்றார்கள்.

கண் சத்திர சிசிச்சை நிபுணர்களான வருண மற்றும் ஆகியோர்கள்  கண்ணில் காணப்பட்ட வெண்புரையை பரிசோதித்து அதன்மூலம் சத்திர சிசிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார்கள்.இவர்களுக்கான வில்லைகள்,மருந்துகள் என்பனவற்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமெரிக்காவில் கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட,பார்வையிழந்த மக்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

பழுகாமம்,களுவாஞ்சிகுடி, செங்கலடி,வாகரை,நரிப்புல்தோட்டம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 130பேருக்கே இவ்வாறு சிசிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts