அகப்பட்ட 13 அடி நீளமான மலைப்பாம்பு

வயல் அறுவடையின் போது 13 அடி நீளமான மலைப் பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ் வடமராட்சி கரவெட்டி கரணவாய் கிராய் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (31) இந்த பாம்பு விவசாயி ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இவ்வளவு நீளமாக பாம்பு அடையாளம் காணப்படுவது அரிதானது எனவும் வயல் அறுவடையின் போது இம்பாம்பு பிடிக்கப்பட்ட விடயம் அப்பகுதி மக்கள் பலருக்கு நம்ப முடியாத விடயமாக காணப்பட்டது.

இலங்கையில் இப்பாம்பினை பாறை மலைப்பாம்பு அல்லது வெங்கிணாந்தி என அழைக்கப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு பிடிக்கப்பட்ட பாம்பு உயிருடன் உள்ளதா அல்லது அடித்து கொல்லப்பட்டுள்ளதா என இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

Related posts