அட்டப்பள்ளத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணம்!

சமகால கொரோனா பயணத்தடை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பட்டிpனி நிலைமைக்குச்சென்ற மக்களுக்கு  சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை வழங்கிவருகிறார்.

நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட அட்டப்பள்ளம் கிராமத்தில் பெண்கள் தலைமைதாங்கும் 67குடும்பங்களுக்கு நேற்று   ஒருதொகுதி உலருணவு நிவாரணங்களை காதாரநெறிமுறைக்கிணங்க அவர் வழங்கிவைத்தார்.

கனடா செல்வமலை விநாயகர் ஆலயத்தின் தொண்டர் சபையினரால் இந்நிவாரணத்திற்குரிய நிதியுதவி வழங்கப்பட்டது. ஆலயதலைவர் எம்.கோபாலன் தலைமையில் இந் நிவாரணம் வழங்குகின்ற நிகழ்வு நடைபெற்றது.

பயணத்தடையால் நாளாந்த கூலித்தொழிலை இழந்து வாழ்வாதாரத்தை பூரணமாக இழந்து உண்பதற்கு எதுவுமே இல்லாத நிலையிலிருந்த இவர்களை இனங்கண்டு வழங்குவதற்கு அவ்வூர் பிரமுகர்கள் உதவியிருந்தனர்.

காரைதீவிலிருந்து தேடிவந்து இத்தகையை நெருக்கடியான காலகட்டத்தில்  காலத்தில் இத்தகைய உதவியை செய்தமைக்காக தவிசாளருக்கும் கனடா ஆலயதொண்டர் சபையினருக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக மக்கள் கூறினர்.

Related posts