அதிபர் திலகம் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள்  40 வருடகால  கல்விச் சேவையில் இருந்து ஓய்வு

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் அதிபர் திலகம் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள்  செவ்வாய்க்கிழமை (2018. 7 .24 ) 40 வருடக் கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
இந்தப் பூமிப்பந்தில் நித்தம் எத்தனையோ மனிதர்கள் பிறக்கின்றார்கள் இறக்கின்றார்கள்.அத்தனைபேரும் மக்கள் மனதில் இடம்பிடிப்பதில்லை.ஒருசிலர்தான் தங்களது சுயநலமற்ற விசாலமான சேவையினால் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றார்கள்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவார்’
என்பது வள்ளுவனின் வாக்காகும்.இதற்கிணங்க இவ்வையகத்தில் வாழும் மக்களுக்கு அதுவும் வளரும் மாணவ சமுதாயத்தின் எழுச்சிக்காக தன் அயராத சேவையினை வழங்கியவர்தான் கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் அதிபர் திலகம் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள்.இன்று செவ்வாய்க்கிழமை (2018.7.24 ) 40 வருடம் கல்விச்சேவையினை அர்ப்பணிப்புடனும் இதுணிச்சலுடனும்இதன் சமூகத்திற்கு கல்வியையூட்டி அறியாமையை நீக்கவேண்டும் எனும் விவேகத்துடனும்இ பெருமனதோடும் இச்சமூகத்திற்கு ஆற்றிவிட்டு உள்ளப்பூரிப்போடு இன்று ஓய்வு பெறுகின்றார்.
சாதாரண நிலையிலுள்ள மாணவர்களையும் கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவதுதான் ஆசிரியர்களின் முக்கியபணியும்இபொறுப்பாகும்.கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பது மட்டும் ஆசிரியர்பணி கிடையாது.அதைத்தாண்டி வாழ்கை கல்வியை மாணவர்களுக்கு பசுமரத்தாணி போன்று போதிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆசிரியர்களின் இலக்காகும்.மாணவர்களிடையே மனிதபிமானத்தை நல்ல பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும்.பாடசாலைக்காலங்களில் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளவேண்டும்.தாயாகவும்.தந்தையாகவும்இசகோதர சகோதரியாகவும் இமதம்,ஜாதி.மொழிகளுக்கு அப்பாற்படவராகவும் சேவையாற்றவேண்டும்.டாக்டர் அறிஞர் அப்துல்கலாம் அவர்கள்  ‘ஆசிரியர்கள் ஆசிரியப்பணியை மனநிறைவோடு செவ்வனே செய்யவேண்டும்’என்று  கூறுகின்றார்.அவரின் கூற்றுக்கு இணங்க கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் திகழ்கின்றார்.வந்தாரை வரவேற்று
வாழ்வாங்கு வாழவைத்து…
மீன்பாட தேன்பாயும் மட்டுமாநகரில் கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய மூத்த இனம்தான் தமிழினம்.’ தமிழர்களின் ஆதிகால கலை,கலாச்சார,பாரம்பரியங்களை அழிந்துவிடாமல் பேணிப்பாதுகாக்கும் சக்தி வழிபாட்டுமிக்க தலமாகவும் கல்லடி விளங்குகின்றது.
 கல்லடிக்கிராமத்தில் அதிபர் திலகவதி அவர்கள்  சங்கரப்பிள்ளை மற்றும் லெட்சுமி தம்பதியினருக்கு மகளாகப் 1958ஆம் ஆண்டு ஆடிமாதம் 24 ம் திகதி சேற்றில் முளைத்த செந்தாமரை போன்று அவனியில் அவதரித்தார்.ஐந்து சகோதரர்களுடன் அதிபர் திலகம் திலகவதி அவர்கள் தொப்புள் கொடி உறவுப்பாசத்துடன் ஒருசெடியில் ஆறுமலர்கள் பூத்த மலர்போன்று
அதிபர் திலவதி அவர்கள் சிவானந்தா,விவேகானந்தா மகளீர் கல்லூரியை ஸ்தாபித்த குடும்பத்தைச் சேர்ந்த திரு.நமசிவாயம் ஹரிதாஸ் அவர்களை கரம்பிடித்துக்கொண்டு இல்லற வாழ்வில் இணைந்துகொண்டார்.லாவண்யா எனும் பெண் பிள்ளையையும்,பிரவீணன் எனும் ஆண்மகனையும் பெற்றெடுத்து குடும்பம் குதூகலிக்க இருவரும் குஷியாக வாழ்ந்து வருகின்றார்கள்.
 சாதாரண ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள் இன்று தன்னுடைய ஆசிரியர்,அதிபர் சேவையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டமக்களினதும்இமாணவர்களினதும்,இன்னும் பல புலமையாளர்களின் மனங்களில் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளார். சேவையின் சிகரம், இரும்புச்சீமாட்டி அன்பின் ஊற்று, அரவணைப்பின் பொக்கிஷம்இ சாமாதானத்தின் தராசு,பாடசாலைக்கு பக்குவமாக பலம் சேர்க்கும் மூலம். என்று இவரை கல்விச்சமூகம் அழைப்பதையும்இகதைப்பதையும் என்காதில் நான் கேட்டிருக்கின்றேன்.மொத்தத்தில் தன்னுடைய ஆளுமையினால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தம்தான் அதிபர் திலகம் திருமதி. திலகவதி ஹரிதாஸ் அவர்கள்.பெண் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல்கொடுத்து பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக மட்டக்களப்பு நகரில் வலம்வந்தவர்தான் அதிபர் திலகவதி அவர்கள்.
சமூகம்சேவை,, தியாகம்இஅர்ப்பணிப்பு மூலம் தமக்குகிடைத்த ஆசிரியர் சேவையைக்கொண்டு கடந்த 40 வருடகாலத்தில் தலைசிறந்த நற்பண்புள்ள மாணவ சமூதாயத்தை கட்டியெழுப்பிய பெருமை கல்லூரியின் முதல்வர் திலகவதிக்கு இருக்கின்றது.தனது ஆரம்பக்கல்வியை மட்/விவேகானந்தா மகளீர் கல்லூரியில்(முன்னர் இராமகிருஸ்ண மிசன் பெண்கள் பாடசாலை)உத்வேகத்துடன் கற்றார்.கல்வி புகட்டும் காலத்தில் முத்தமிழிலும் திறமையான முதல் மாணவியாக திகழ்ந்தார்.தனது உயர்தரக்கல்வியை மட்/சிவானந்தா வித்தியாலயத்தில் கற்றார்.அக்காலத்தில் மட்டக்களப்பில் சிவானந்தா வித்தியாலயம் மிகப்பிரபல்யமாக இருந்தது.இராமகிருஸ்ண மிஷனெரிமார்களின் கட்டுக்கோப்புக்கள் இயங்கிய பாடசாலையில் கல்விகற்ற பலர் இன்றும்கூட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தலைசிறந்த பதவிகளில் இருக்கின்றார்கள்.அப்படிப்பட்ட புகழ்பூத்த பாடசாலையான சிவானந்தா வித்தியாலயத்தின் முதல் பெண்மாணவியாக சேர்ந்தவர் என்ற பெருமையும்இசிறப்பும் அதிபர் திலகம் திலகவதிக்குண்டு.உயர்தரக்கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றவர் தனது தந்தையார் திடீர் விபத்து ஒன்றில் அகப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொண்டு உயர்படிப்பை தொடரமுடியவில்லை.சிறுவயதிலே குடும்பச்சுமையை சுமக்க வேண்டிய பொறுப்பும் இவருக்கு ஏற்பட்டது.
1978.7.21இல் ஆசிரியர் நியமனம் பெற்றவர்.மட்/வாகரை மகாவித்தியாலயத்தில் முதல் கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.19 வயதில் ஆசிரியை சேவைக்குள் நுழைந்த பெண்ணாக அதிபர் திலகவதி தடம்பதித்துள்ளார்.ஆசிரியர்தொழில் கிடைத்த பின்னரே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பரீட்சைக்கு தோற்றி கலைப்பட்டதாரியானார்.
இவர் வந்தாறுமூலை கணேச வித்தியாலயம்இஏறாவூர் அல்முனிறா வித்தியாலயம்இகாத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயம்இசிவானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.இதில் சிவானந்தா வித்தியாலயத்தில் 25 வருடம் ஆசிரியராக சிறப்பாக கடமையாற்றியுள்ளார்.அங்கு அவர் அரசியல்இதமிழ் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்ததோடு பேச்சாற்றல்,விவாதம் செய்தல்,கட்டுரை எழுதும் ஆற்றல்,நாடகம் நடித்தல் போன்றவற்றில் வல்லவராக காணப்பட்டதால் பல நிகழ்வுகளை மாணவர்களுக்கு தயார்படுத்தி வெற்றிபெறச் செய்தவர்.இதனால் அதிபருடன் சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர்கள் ஏராளமானோர் இன்றும் தொடர்பில் இருந்து அன்பாகவும்,பண்பாகவும் பழகுகின்றார்கள்.இதுவொரு நல்லெண்ணம் முள்ள நட்பாகும்.இது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அதிபர் திலகவதித்தாயாருக்கு மட்டும்தான் கிடைத்திருக்கின்றது.
 ஆசிரியராக இருந்த காலத்தில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இரண்டு வருடங்கள் சமூகக்கல்வி ஆசிரியராகவும் பயிற்சி பெற்றுள்ளார்.தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றிருக்கின்றார்.பின்னர் அதிபர் போட்டிப்பரீட்சைக்கு தோற்றி விஷேட  சித்திபெற்றவர்.2010.3.1 இல் மட்/புனித மிக்கல் கல்லூரியில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார்.2010 இல் மட்ஃவின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையில் பிரதி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.அதன் பின்னர் 2011.1.19இல் தான் ஆரம்பக் கல்வியை கற்ற பாடசாலையான மட்ஃவிவேகானந்தா மகளீர் கல்லூரிக்கு அதிபராக கடமையாற்றும் பொறுப்பினை இறைவன் இவருக்கு வரம்கொடுத்திருக்கின்றார்.தான் அரிவரி கற்ற பாடசாலையிலே அதிபராக இருந்து காத்திரமான கல்விச்சேவையை செய்திட்டு ஆசிரியர்கள்,மாணவர்கள்,பாடசாலைச் சமூகத்தினர் மத்தியிலே ஓய்வுபெறும் பாக்கியம் பெற்ற பெண்ணாகவும் கல்லூரி முதல்வர் திலகவதி திகழ்கின்றார்.

Related posts