அரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது ; ரணில்

அரசியல் அமைப்பு பேரவை மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதமர் ,அரசியல் அமைப்பு பேரவையில் பிரதமருக்கு ஐந்து உறுப்பினர்களை நியமிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதேவேளை, எதிர்கட்சித் தலைவருக்கு ஐந்து பேரை நியமிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது தெரிவித்தார்.

சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் நியமனங்களின் போது அரசியலமைப்புச் சபையில் எந்தவித அரசியல் அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை. இதனாலேயே சுயாதீனமாக செயற்படும் ஆணைக்குழுக்களாக இவை காணப்படுகின்றன. பேரவையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ பெரும்பான்மை இல்லை என்றும் கூறினார்.

அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு தொடர்பில் சபையில் நேற்று இடம்பெற்ற உரையாடலின்போது பிரதமர், அரசியலமைப்புப் பேரவையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. இதன் உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலமே உயர்பதவிகளுக்கான நியமனங்களை முடிவுசெய்கின்றனர். அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராகவிருந்த சமல் ராஜபக்ஷ விலகியிருப்பதால் அவருடைய வெற்றிடத்துக்கு வேறொருவரை நியமிக்கவேண்டியுள்ளது. இது தொடர்பில் சகல கட்சிகளுடனும் கலந்துரையாடியே தீர்மானம் மேற்கொள்ளப்படும். 
நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது எந்தவித அரசியல் அழுத்தங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை. புதவி உயர் நிலை அடிப்படையில் பதவிகளை வழங்குவதாயின் மார்க் பெர்னான்டோ பிரதமர நீதியரசராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை. 
17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரே அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தனர். எனினும், 18 ஆவது திருத்தத்தின் ஊடாக. மஹிந்த ராஜபக்ஷ. இதனை இல்லாமல் செய்த ஜனாதிபதி, அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியமை வரலாறு.இவ்வாறான நிலையில் 19ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்புப் பேரவைக்கு அரசியல் பிரதிநிதிகள் மாத்திரமன்றி சிவில் சமூகப் பிரதிநிரதிகளையும் நியமித்துள்ளோம். கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் ஏற்பட்ட கோபத்தை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்புப் பேரவையின் செயற்பாடு குறித்து கூச்சலிடுகின்றனர்.
இதனாலேயே நீதியரசர்களின் மதம் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி விமர்சிக்கின்றனர்.அரசியலமைப்புப் பேரவையினால் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சுயாதீன ஆணைக்குழுக்கள் எமக்கு எதிராகவும் தீர்ப்புக்களை வழங்கியுள்ளன. பலரை வழக்குகளிலிருந்து விடுவித்துள்ளது. அவ்வாறான சந்தர்பங்களில் நீதமன்றங்கள் சிறப்பானவை என்று தெரிவித்தவர்களுக்கு தற்போது அரசியலமைப்பு பேரவை தற்பொழுது சரியில்லாததாகிவிடுகிறது என்றும் கூறினார்.

இதேவேளை ஜனாதிபதி தலைவராக உள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியொன்றிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி உரித்தாக வேண்டும். அதற்கிணங்க, அரச தலைவர், தலைமை பதவி வகிக்கின்ற கட்சிக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவிடயம் தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருக்குமாயின்இ புதிய அரசியல் அமைப்பு யோசனைகளில் அவற்றை உள்ளடக்க வேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இதுவிடயம் தொடர்பில் சிக்கல் இருப்பதனால் புதிய அரசியல் அமைப்பில் இத்தகைய பிரச்சினையை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதிகளான டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரது காலங்களில் ஜனாதிபதியை சார்ந்த கட்சியின் உறுப்பினருக்கே எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Related posts