ஆசிரியர் சேவையில் 30 வருடங்கள் தன்னை அர்ப்பணித்து சேவை நிறைவு காணும் ஆசிரியை செல்வி.சீனித்தம்பி நேசமணி

மட்/பட்/பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக கடமையாற்றிய செல்வி சீனித்தம்பி நேசமணி ஆசிரியை அவர்கள் 30 வருட ஆத்மார்த்தமான ஆசிரியர் சேவையில் இருந்து தனது 60 ஆவது அகவைநாள் 2021.08.18 இன்று பணி நிறைவு காண்கின்றார்.
மட்டுமாநகரின் தென்னகத்தில் வெற்றிலைக் கொடி சூழ வேழமுகத்தான் சுயம்புருவாய் எழிலோச்சும் களுதாவளையில் சீனித்தம்பி பொன்னம்மா தம்பதியினருக்கு 1961.08.18 இல் ஜனனமாகி தனது ஆரம்பக் கல்வி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தினை களுதாவளை தேசியபாடசாலையில் நிறைவு செய்து கல்முனை உவெஸ்லி கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் தனது உயர் தரப்படிப்பினை நிறைவு செய்தார்.
 
தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பினைத்தொடர்ந்தார்.
 
 1992.04.01 இல் ஆசிரியையாக முதல் நியமனத்தை தனது பிறந்த மண்ணில் அமைந்துள்ள பழம்பெரும் பாடசாலையான மட்ஃபட்ஃகளுதாவளை இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் தனது கன்னிப் பணியைத் தொடர்ந்து 2003.02.23 வரை மாணவர்கள் தரம்  05 புலமைப்பரிசில் பரீட்சையில் தன்னிகரில்லா சாதனைபெற தூன்றுகோலாய் மிளிர்ந்தார்
 
தொடர்ந்து 24.02.2003 தொடக்கம் 31.12.2008 வரை மட்ஃபட்ஃதிருப்பழுகாமம் விபுலானந்தர் வித்தியாலயத்தில் தொடர்பணியை ஆற்றி மட்ஃபட்ஃமாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் 01.01.2029 தொடக்கம் 31.12.2011 வரை தனது மனநிறைவான சேவையினை ஆற்றினார்.
 
தொடர்ந்து தனக்கு எழுத்தறிவித்த கோயிலான மட்ஃபட்ஃகளுதாவளை தேசியபாடசாலையில் 01.01.2011 தொடக்கம் 31.02.2011 வரை சேவையாற்றும் பெரும் பாக்கியத்தினையும் பெற்றார்.
 
 ஓடுகின்ற நதி ஊரெலாம் வளம் சேர்ப்பது போல்’ ஆசிரியர் சேவையும் அதுபோல் மகத்தானது ‘பல்வேறுபட்ட மணவர் மனங்களை மதகுடைத்து பிரவகிக்கும் பேராறாய் கல்வியினை களமறிந்து விளைவிக்கும் பேராளர்களே! ஆசான்களாகும்’ அந்த வகையிலே அவரின் கல்விப் பணியானது நில்லாது ஓடும் நதிபோல மீண்டும் மட்ஃபட் ஃ  பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில்  பணியாற்றும் பேறு 01.01.2012 முதல் 18.08.2021 வரை வாய்க்கப் பெற்றது.
 
இவ்வாறு தனது சேவைக்காலத்தில் சாதாரண மாணவர்களை சாதனையாளர்களாக வடிவமைக்கும் சிற்பியாகவும்இ தனது ஆற்றலைஇ திறனைஇ மறுவிம்பமாக மாணவர்கள் மத்தியிலே தடம் பதித்து இன்று பணிநிறைவு காணுகின்றார்.
 
ஆசிரியை அவர்கள் தனது சேவைக்காலத்தில் மிகவும் நேர்த்தியான நேரமுகாமைத்துவத்தினையும்இகடமையில் கடிகாரமாகவும்இ தாமாகவே முன்வந்து சேவையாற்றுபவராகவும்இ தன்னிலையில் இருந்து இறங்கி மாணவர் மனங்களில் என்றும் நீக்கமற நிற்பவராகவும் மிழிர்ந்தார். அந்த வகையிலே விளையாட்டுஇஇணைப்பாடவிதானம்இகலைஇகலாசார பண்பாட்டு விழுமியங்களை மாணவர்மனங்களில் விழுதாடச் செய்து நாளைய தலைமுறைக்கு நல்வித்திட்ட மனநிறைவுடன் இன்று பணிநிறைவு காண்கின்றார்.
 
இவ்வாறு தனது ஆசிரியர் சேவையில்  மூன்று தசாப்தங்கள் தன்னை அர்ப்பணித்து ஆத்மார்த்தமான மனநிறைவுடன் 2021.08.18 ஆகிய இன்று
 
60 வது ஜனனவிழாக்காணும்  செல்வி சீனித்தம்பி நேசமணி ஆசிரியை அவர்களின் ஓய்வு நிலை வாழ்நாட்கள் நீண்ட ஆயுளும் தேகாரோக்கியத்துடன் இன்பமானதாக அமைய  வேண்டுமென்பதே கல்விச் சமுகத்தின் பிரார்த்தனையாக காணப்படுகின்றது.
 
 
 
 
 
 
 
 

Related posts