இசிபதனாராம ரஜமஹா விகாரையின் பிரதான நுழைவாயில், வாகல்கட மற்றும் தான சாலை ஆகியவை கௌரவ பிரதமரினால் புத்த சாசனத்திற்கு கையளிக்கப்பட்டது

பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபதனாராம ரஜமஹா விகாரையின் பிரதான நுழைவாயில், வாகல்கட மற்றும் தான சாலை என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (2020.12.20) புத்தசாசனத்திற்கு (‘புது சசுன’) கையளிக்கப்பட்டது.
 
பிரதான நுழைவாயில் மற்றும் ஸ்ரீ பஞ்ஞரன்சி தேரர் ஞாபகார்த்த தான சாலை கட்டிடம் ஆகியவற்றின் நினைவு பலகைகள் கௌரவ பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது.
 
பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபதனாராம ரஜமஹா விகாராதீஷ்வர வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண பிரதான சங்கநாயக்கர் பண்டிதர் அதி வணக்கத்திற்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரரின் அனுசாசனம் மற்றும் பூஜ்யபாத மாத்தளை அனோமதஸ்ஸி தேரரின் வழிநடத்தலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ பஞ்ஞரன்சி தேரர் ஞாபகார்த்த தான சாலை கட்டிடம் இலங்கை இராணுவத்தின் பூரண ஒத்துழைப்புடன் குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்பட்டது.
 
குறித்த சந்தர்ப்பத்தில் பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபதனாராம ரஜமஹா விகாராதீஷ்வர வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண பிரதான சங்கநாயக்கர் பண்டிதர் அதி வணக்கத்திற்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரர், லக்ஷ உயன வித்தியாலயத்தின் பிரதி அதிபர் வணக்கத்திற்குரிய பேராதெனியே சாசனரதன தேரர், வணக்கத்திற்குரிய மாத்தளை அனோமதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் பங்கேற்றனர்.
 
மேலும், கௌரவ இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, சிறிபால கம்லத், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts