ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு ஆகியன கௌரவ பிரதமரினால் திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்  (2020.12.21) திறந்துவைக்கப்பட்டது.
 
அதற்கமைய ஜேதவனாராம வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தனித்துவமான புராதன பொருட்கள் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது.
 
அருங்காட்சியக திறப்பு விழாவில் கலந்து கொண்ட கௌரவ பிரதமர், ஜேதவனாராமய விகாரை பூமியில் நாக மரக் கன்றொன்றை நாட்டிவைத்தார். தொடர்ந்து ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் கௌரவ பிரதமரின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது.
 
மத்திய கலாசார நிதியத்தின் 50 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு இணையாக புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக சாலை அமைப்பிற்கு 82 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
தொல்பொருள் மதிப்புமிக்க இடிபாடுகள் மற்றும் புதைபடிவங்களை பாதுகாக்கும் செயற்பாடு ஜேதவன தொல்பொருள் அருங்காட்சியகத்தினூடாக முன்னெடுக்கப்படுவதுடன் அது இலங்கை கலைஞர்களினால் நிர்மாணிக்கப்பட்ட பெருமை மிக்க படைப்பாகும்.
 
கௌரவ பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று மதிப்புமிக்க திட்டம் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் இலங்கையின் மகிமையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
 
அனுராதபுரம் அடமஸ்தானாதிபதழ அதிவணக்கத்திற்குரிய கலாநிதி பல்லேகம சிறிநிவாச தேரர் மற்றும் ஜேதவனாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய இஹலஅல்மில்லாவே ரதனபால தேரரின் அனுசாசனத்தில், சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைக்கு அமைய கலாசார மறுமலர்ச்சிக்காக இந்ந அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
 
குறித்த சந்தர்ப்பத்தில் ஜேதவனாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய இஹலஅல்மில்லாவே ரதனபால தேரர் மற்றும் ருவண்வெலி வைத்யாதிகாரி ருவன்வெலி மகாசாய விகாராதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
 
அவர்களுடன், கௌரவ அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் கே.டீ.எஸ்.குமாரசிறி, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், அனுராதபுரம் நகரபிதா எச்.பீ.சோமதாச, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts