இன்று பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!

அரச பாடசாலைகள் இன்று (2) திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுகிறது.
 
இவ்வருட 2022 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (02) திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
 
 இன்று ஆரம்பிக்கும் மூன்றாம் தவணை எதிர்வரும் 20.01.2023 ஆந் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.
 
க.பொ.த. உயர் தர பரீட்சைக்காக 21.01.2024-19.02.2023 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.
 
 
2023 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டுக்கான முதலாம்  தவணை  24.03.2023 ஆந் திகதி ஆரம்பமாகவுள்ளது.
 
2022 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் 20.02.2023-21.03.2023 வரை நடைபெறும்.(தமிழ், சிங்கள மொழி பாடசாலை)
 
2023 ஆம் கல்வி ஆண்டு சகல பாடசாலைகளிலும் 24.03.2023 இல் ஆரம்பித்து 22.12.2023 இல் நிறைவடையும்.
 
2023 க்கான க.பொ.த.சா/த பரீட்சை பெரும்பாலும் டிசெம்பர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts