மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ஒரு குடும்பத்தின்  முன்மாதிரி!

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை பூர்த்திசெய்யும் வகையில்  காரைதீவில் உள்ள ஒரு குடும்பம் ஒரு தொகுதி மருந்து பொருட்களை வழங்கியுள்ளது.
 
காரைதீவு மார்க்கண்டு(முதலாளி) சமூகஅறக்கட்டளை மூலம் ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் புதுவருட தினமான நேற்று (1) ஞாயிற்றுக்கிழமை குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
 
இவர்கள்  ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான  மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து அன்பளிப்புச்செய்துள்ளது.
 
சமுக அறக்கட்டளை பிரதிநிதியான  திருமதி மார்க்கண்டு மற்றும்  மகன் வித்தியானந்தன் உள்ளிட்ட குழுவினர் நேற்று வைத்தியசாலைக்கு சென்று அதனை வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரனிடம் வழங்கி வைத்தனர்.
 
மருந்து தட்டுப்பாடு, தொடர்பாக பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் உதவும்படி மக்களிடம் பகிரங்கமாக கோரியிருந்தமை தெரிந்ததே.
 
இதேவேளை ,வைத்திய சாலை மின்பிறப்பாக்கிக்கான எரிபொருளை இதுவரை நான்கு தரப்பினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts