இரண்டு மாதத்துக்குள் மாகாண சபை தேர்தல்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடு இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பிலான கட்சி தலைவர்களின் சந்திப்பு நேற்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணையகத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தங்களின் கட்சி நிலைப்பாட்டினை முன்வைக்கின்றனரே தவிர, இதுவரையில் பொதுவான நிலைப்பாட்டுக்கு வரவில்லை.

அத்துடன், எவ்விதமான அழுத்தங்களுமின்றி சுயாதீனமாகவே தேர்தல் ஆணையகம் செயற்படுகின்றது.

தேர்தல் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டால் மாகாண சபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த தயார்.

எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எம்முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும் என தெரிவித்துள்ளார்..

Related posts