இ ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் தேசிய நிகழ்வு !

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலினுடாக இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் தேசிய நிகழ்வானது  ஞாயிற்றுக்கிழமை காலை  அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.
 
காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி அறநெறிப் பாடசாலையில் காரைதீவு பிரதேச செயலாளர்  எஸ். ஜெகராஐன் தலைமையில் இடம்பெற்ற அந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள் ஆகியோரும்  பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வே. ஜெகதீசன் அவர்களும் கலந்துகொண்டனர்.
 
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒழங்கமைப்பில் இட்ம்பெற்ற  இந்நிகழ்வில்  விசேட அதிதிகளாக ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தின் தலைவர்  எஸ். நந்தேஸ்வரன் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிமாறன் காரைதீவு நீர்வழங்கல்அதிகார சபையின் பொறுப்பதிகாரி வி.விஐயசாந்தன் காரையடி ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் தலைவர்  எம். மயில்வாகனம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்  ஆ.பூபாலரெத்தினம் சித்தானைக்குட்டி ஆலய செயலாளர்  எஸ். பாஸ்கரன் பொருளாளர்  த.தவக்குமார் பிரதேச கலாசாரஉத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவலோஜினி மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்கள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
அறநெறி மாணவர்கள் புத்தாண்டுக்கான உறுதியுரை எடுத்ததுடன் அவர்களுக்கு அறநெறி அறிவுரைகள் வழங்கப்பட்டன. நீதிநூல்களும் வழங்கப்பட்டன.

Related posts