உப உணவுச் செய்கையை ஊக்குவிக்கும்திட்டத்தின் கீழ் அக்கறைப்பற்றில் நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு அறுவடை.

அம்பாறை மாவட்டத்தில் உப உணவுச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக விவசாயப் போதனாசிரியர் எம்.ஐ.எம். பிறாஸ் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறுவடை விழாவில் நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு என்பன அண்மையில் அறுவடை செய்யப்பட்டதுடன் சிறந்த விவசாய நடவடிக்கைகளை (GAP) மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
 
 
அக்கரைப்பற்று ஆலிம்நகர் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பு விவசாயப் போதனாசிரியர் ஏ.ஜி. பிர்னாஸ் ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப பணிப்பாளர் எம்.எப்.அஹ்மத் சனீர் அவர்களும் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். றாசீக் அவர்களும் கலந்து கொண்டதுடன் பாட விதான உத்தியோகத்தர் முகம்மத் சியாத், விவசாய வியாபார ஆலோசனைப் பிரிவுக்கு பொறுப்பான உத்தியோகத்தர் அஹமட் ஜெமீல் மற்றும் விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts