உலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது

பாறுக் ஷிஹான்

உலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது அதனால் தான் அந்நூலகம்  தீக்கிரையாக்கப்பட்டிருக்கலாம் என  கல்முனை மாநகர சபை உறுப்பினர்  சப்ராஸ்  மன்சூர் குறிப்பிட்டார்
 
 கல்முனை பொது நூலகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் வர்த்தக வாணிப துறை அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி ஏ ஆர் எம் மன்சூரின்  வரலாற்று புகைப்பட திரைநீக்க நிகழ்வு வெள்ளிக்கிழமை(18) மாலை இடம்பெற்றபோது அதில்  கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
 
மேலும் தனது கருத்தில்
 
கல்முனை நகரின் இதயமாக அமைந்துள்ள இந்த வாசிகசாலையானது அம்பாறை மாவட்டத்தில் முதலாவதாக அமையப்பெற்ற வாசிகசாலையாகும். இந்த வாசிகசாலையின் குறைகளை கண்டறிய வந்த போது தான் நான் உண்மையை அறிந்தேன். இந்த வாசிகசாலையானது ஊனமுற்றிருப்பதை அறிந்தேன். கம்பெரலிய வேலைத்திட்டத்தில் வாக்காளர்களை திருப்தி படுத்திவதற்காக பணங்கள் வீணடிக்கப்படுகின்றதே தவிர கல்முனைக்கான நூலகத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மறைக்கப்பட்டே வருகின்றது .
 
மேலும்  திட்டமிட்டு அழிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகமானது தன்னகத்தே பல வரலாறுகளை கொண்டிருந்தது. குறிப்பாக உலகில் இருந்து அழிக்கப்பட்ட யூத நாகரிகம் யாழ் நூலகத்தில் மாத்திரமே காணப்பட்டது. இவை அனைத்தும் தீக்கிறையாக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. புத்தகங்களை அனைவரும் வாசிக்க வேண்டும்  புத்தகங்களை சுமந்த அறிவையோ இருதயங்களையோ எவராலும் தீக்கிறையாக்க முடியாது  என கூறினார்.
 
நிகழ்வினைத் தொடர்ந்து கல்முனை பொது  நூலகத்தின் தற்போதைய நிலையையும் வாசகர்கள் எதிர்நோக்கும்  சிரமங்களையும் கண்டறியும் பொருட்டு   நேரில் சென்று பார்வையிட்டார்.

Related posts