ஐ.நா.மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது

இந் நிலையில் இன்றைய தினமே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் ஆகிய இருவரும் உரையாற்றவுள்ளனர்.

இதன்போது இவர்கள் இருவரும் இலங்கையின் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இன்று ஆபிரிக்க ஒன்றியத்தின் பிரதிநிதி, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர்.

அத்துடன் நாளை பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மன், பிரித்தானியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் உரையாற்றவுள்ளனர். இவர்கள் தமது உரையின்போது இலங்கை விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் அடுத்த மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும். இதன்போது இலங்கை தொடர்பில் இரண்டு விவாதங்கள் நிகழ்த்தப்படவுள்ளன. 

Related posts