கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்த திராணிஇல்லாத தமிழத்தலைமைகளை இன்னுமா நம்புவது?

ரணில் அரசாங்கத்தை பாதுகாத்த த.தே.கூட்டமைப்பினர் அதற்கு பிரதியுபகாரமாக கிழக்கு தமிழ்மக்களுக்கு எதனைச் செய்தார்கள்? கல்முனையில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தலைவர் சட்டத்தரணி சிவநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.யுத்தம் மௌனித்த பின்னர் கடந்த பத்துவருடகாலமாக கிழக்குவாழ் தமிழர்களுக்கு தமிழ்த்தலைமைகள் என்ன செய்தார்கள்? என்ன முயற்சி எடுத்தார்கள்? என்பதை பகிரங்கமாக கூறட்டும்ரணிலை காப்பாற்றியமைக்கு இந்த தமிழ்த்தலைமைகள் கிழக்குதமிழ் மக்களுக்கு பதிலுக்கு பெற்றுக்கொடுத்ததென்ன?இவ்வாறு கிழக்கு தமிழர் ஒன்றியத்தலைவர்; சிரேஸ்ட சட்டத்தரணியும் பதில் நீதிபதியுமான தட்சணாமூர்த்தி சிவநாதன் கல்முனையில் இன்று உரையாற்றும் போது கேள்வியெழுப்பினார்

கேவலம்கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கைஎடுக்கத் திராணிஇல்லாத தகுதியில்லாத தமிழ்த்தலைமைகளை இன்னுமா நம்புவது? என்றும் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்

கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் கல்முனைப்பிராந்திய நிருவாகக்குழுவைத் தெரிவுசெய்வதற்கான பொதுக்கூட்டம் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்டத்தலைவர் சிரேஸ்ட்ட பொறியியலாளர் ரி.சர்வானந்தா தலைமையில் கல்முனை நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ்த்தலைமைகளுக்கு சாணக்கியமும் இல்லை தகுந்த திறமையும் இல்லை’ என்று கூறிய தலைவர் த.சிவநாதன் மேலும் உரையாற்றுகையில், 70வருடங்களாக தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகப்போராடினர். பின்னர் கடந்த 30வருடங்களாக ஆயதப்போராட்டத்திலீடுபட்டனர்.அக்காலகட்டத்தில் புலிகள் அரசியல் பற்றிப்பேச அனுமதிக்கவில்லை.ஒருவழிக்கு அதுசரி.ஆனால் அந்த ஆயுதப்போராட்டம் 2009இல் மௌனித்தபின்பு தமிழ்மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் பயங்கள் தேவைகள் எழுந்தன.

நிலைமை தலைகீழாக மாறின. போருக்குப்பின்னர் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்கை தமிழ்மக்கள்மாகாணத்திற்கும் வாழ நாடாளுமன்றத்திற்கும் வாழ வாக்களித்து அனுப்பிவைத்தார்கள். இதுவரைக்கும் அவர்கள் சாதித்தது என்ன? இன்று தமிழ்மக்களின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்வது யார்? தமிழ்த்தலைமைகளை எமது தமிழ்மக்கள் நிறைய நம்பியிருந்தனர்ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள். கடந்த 10வருடங்களாக தமிழ்த்தலைமைகள் எதைச்சாதித்தன? இந்த தமிழ்மக்களைத் தொடர்ந்து கஸ்ட்டத்தில் இருக்கச்செய்துள்ளனர்.தற்போது கிழக்கில் மற்றுமொரு சமுகத்தின் ஆதிக்கத்தின்கீழ் திண்டாடவைத்துள்ளது. அவர்களுடன் ஈடுகொடுக்கமுடியுமா? இந்த நியாயமான கேள்விக்கு அவர்கள் விடைகூறுவார்களா? முடியாது நாம்தான் அதற்கு விடையறுக்கவேண்டும்கிழக்கில் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்தனர். இந்த கல்முனை டிஎல்லைகளை அறிவோம். தற்போதுள்ள கல்முனை தமிழ்ப்பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த முடியாத தமிழ்த்தலைமைகளை இன்னும் தொடர்ந்து நம்பலாமா?

Related posts