ஒருநாள் முன்னதாக பயணிக்க முடிவு: காட்டுப்பாதை திறப்பின் எதிரொலி!

 
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிச்செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் திட்டமிட்ட நேரசூசிக்கு ஒருநாள் முன்னதாக பயணித்து வருவதாக தலைவர் வேல்சாமி மகேஸ்வரன் தெரிவித்தார்.
 
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை எதிர்வரும் 4ஆம் திகதி திறப்பதே அதற்கான காரணம். 
யூலை 06ஆம் திகதி திறக்கப்படலாமென்ற எதிர்பார்ப்பில் தமது பயண நேரசூசி ஏலவே தயாரிக்கப்பட்டதாகவும் அவை அத்தனை ஆலயங்களுக்கு ஏலவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும் வேல்சாமி கூறினார்.
 
ஆனால் தற்போது 4ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படவிருப்பதால் ஒருநாள்முன்கூட்டி பயணத்தை சற்று விரைவுபடுத்தியுள்ளதாகக் கூறிய வேல்சாமி இன்றிலிருந்து பின்னாலுள்ள சகல ஆலயங்களுக்குமான தமது வருகை  ஒரு நாள் முன்கூட்டி அமையுமென்பதை தெரிவித்துக்கொண்டார்.
 
ஒருநாள் முன்கூட்டிப்பயணிப்பதால் தாந்தாமலையைத் தரிசிக்க முடியாமல் போய்விட்டது.
நேற்று(20) பழுகாமம் பெரியபோரதீவு போன்ற இடங்களுக்குச்சென்ற குழுவினர் இன்று(21) வியாழக்கிழமை மண்டுரில் தங்குவர். எதிர்வரும் 23 ஆம் 24ஆம் திகதிகளில் காரைதீவில் தங்க குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
மட்டக்களப்புக்கு விஜயம்செய்தபோது மட்டக்களப்பிலுள்ள காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர்  வேல்சாமி குழுவினருக்கு காலைஆகாரம் வழங்கி வழியனுப்பிவைத்தனர். அதன்போது பிடித்த படம் இது.

Related posts