கம்பெரலிய திட்டத்தின்கீழ் மண்முனை தென்எருவில் பற்று பிரிவிற்கு 49.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு

கம்பெரெலிய துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திற்காக 49.5 மில்லியன் நிதியினை மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் தேதிய கடதாசி கூட்டுத்தாபன தலைவரும் ஐக்கிய தேசியகட்சியின் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்கள் ஒதுக்கிடு செய்துள்ளதாக மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம தெரிவித்துள்ளார்.

இத்திட்டங்களில் 21 வீதிகள் புனரமைப்பிற்கு 38மில்லியனும்,04 ஆலயங்கள் புணரமைப்பிற்காக 2.5மில்லியனும், 01 சிறுவர் விளையாட்டு மைதானத்திற்காக 1.00மில்லியனும், பாடசாலைகளின் மலசலகூடங்களுக்காக 2.00 மில்லியனும்,01குளம் புனரமைப்பிற்காக 2.00மில்லியனும்,14 வீடுகளின் கூரைகள் புனரமைப்பிற்காக 4.2மில்லியனும் மொத்தமாக 49.5மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 

Related posts