கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு

கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கம்  மட்டக்களப்பிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.

அதன்படி, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும், அவர்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் உள்ளிட்டோர் இந்த முறைப்பாட்டை  மட்டக்களப்பில் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் கூறுகையில்,

நாட்டில் சுமார் ஒரு வருடம் மூன்று மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையையும், எந்தவித தீர்வினையும் வழங்காததால் இந்த முறைப்பாட்டை செய்துள்ளோம்.கிழக்கு மாகாணத்தில் 1113 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கு இந்த அரசு முயல வேண்டும்.

ஒன்லைன் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு சமவாய்ப்பு இல்லாத காலகட்டம் ஏற்படுள்ள காரணத்தினால் பல்வேறு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் இடைவிலகல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருக்கும் தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் வெறும் பலகையை மட்டும் வைத்துக் கொண்டு கற்றல் செயற்பாடுகள் எதுவுமே இல்லாத நிலமை.

தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதில் காட்டும் அக்கறையினை ஏன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அரசாங்கம் காட்டுவதில்லை. ஆசிரியர்களை கூட்டங்களுக்கு வற்புறுத்தி அழைக்கின்றனர்.

ஆனால் எந்தவொரு ஆசிரியருக்கும் தடுப்பூசி வழங்கவில்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. சுகாதார அமைச்சின் சுற்றுநிரூபம் மீறப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

Related posts